2026 - 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அண்டை நாடுகளின் மேம்பாட்டு உதவியாக ஒதுக்கப்படும் நிதியில் வங்கதேசத்துக்கான பங்கு குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், மங்கோலியா நாடுகளுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்துக்கு ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இத்தொகை ரூ. 120 கோடியாக இருந்தது.
அதிகபட்சமாக பூடானுக்கு ரூ. 2288 கோடியும், அடுத்தபடியாக நேபாளத்துக்கு ரூ. 800 கோடியும், மாலத்தீவுக்கு ரூ. 550 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் வெளியுறவுத் துறைக்கு மொத்தமாக ரூ. 22,118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்டை நாடுகளுடனான மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் வங்கதேசத்துகான தொகையை மத்திய அரசு குறைத்துள்ளது.
வங்கதேச சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு எதிராக தலைநகர் தாகாவில் ஏற்பட்ட கலவத்தின் விளைவாக இந்த பட்ஜெட் பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2024 ஆம் ஆண்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில், தனது நாட்டை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. இடைக்கால ஆட்சியிலும் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது வன்முறைகள் அதிகரித்துள்ளன.
மேலும், முகமது யூனுஸ் ஆட்சியானது பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் எகிப்தில் நடைபெற்ற மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப்பை, யூனுஸ் சந்தித்துப் பேசினார்.
இதுமட்டுமின்றி இந்தியாவில் இருந்து வங்கதேசம் செல்வதற்கான சுற்றுலா விசாவிலும், வங்கதேசத்திலிருந்து இந்தியா வருவதற்கான சுற்றுலா விசாவிலும் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. மேலும் வங்கதேசத்திலுள்ள தூதரக அதிகாரிகளின் குடும்பங்களையும் திரும்ப அழைத்துள்ளது.
இந்த அரசியல் விவகாரம் விளையாட்டுத் துறையிலும் எதிரொலித்தது. ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தங்கள் அணியின் போட்டியை இந்தியாவுக்கு பதிலாக அண்டை நாடான இலங்கையில் நடத்த அந்நாட்டு அரசு அனுமதி கோரியிருந்தது.
இதன் விளைவாக ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த வங்கதேச அணியைச் சேர்ந்த முஸ்தாபிஸுர் ரஹ்மான் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவையெல்லாம் மத்திய பட்ஜெட்டில் எதிரொலித்துள்ளதாகவே கருதப்படுகிறது.
Summary
Why India slashed Bangladesh’s share of neighbourhood aid in Budget 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரீபியன் நாடுகளுக்கு 9 நாள்கள் ஜெய்சங்கா் சுற்றுப்பயணம்

4 ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமா் மே 15-இல் பயணம்

காரைக்குடியில் பேசாமல் சென்றது ஏன்? விஜய்க்கு ப. சிதம்பரம் கேள்வி
திமுக மிரட்டியதா? தொகுதிகளை குறைத்தது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் பேட்டி!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



