சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

மும்பை நெடுஞ்சாலையில் விபத்து : 24 மணிநேரமாகியும் நீடிக்கும் போக்குவரத்து நெரிசல்!

24 மணிநேரமாகியும் மும்பை - புணே நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சீராகாமல் உள்ளதால் பயணிகள் அவதி...

மும்பை - புணே நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் / விபத்துக்குள்ளான லாரி - படம் - பிடிஐ

Updated On :

மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் எளிதில் தீப்பற்றக்கூடிய எண்ணெய் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

24 மணிநேரமாகியும் மும்பை - புணே நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சீராகாமல் உள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்டாலா காட் பகுதியில் ரசாயனப் எரிபொருள் எடுத்துச் சென்ற லாரி கவிழ்ந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானது. அதோஷி சுரங்கப்பாதை அருகே நடந்த இந்த விபத்தால், போர்காட் பகுதி வரையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையேவுள்ள நெடுஞ்சாலை என்பதால், மாற்று வழிப்பாதைக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மும்பை செல்லும் வாகனங்களுக்கான புணே வழித்தடத்தின் ஒரு பாதியை இரவு 7.30 மணியளவில் திறக்கப்பட்டுள்ளாது. அதன் வழியே மும்பைக்குச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. புணே நோக்கிச் செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு இருவழித்தடங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

இலகு ரக வாகனங்கள் 42 கி.மீ. சுற்றிச்செல்லும் வகையில் பழைய கபோலி நெடுஞ்சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை பாதுகாப்பு ரோந்துக் குழுக்களின் கண்காணிப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.

விபத்துக்குள்ளான லாரியில் நச்சுத்தன்மை மிக்க, மிகவும் எளிதில் தீப்பற்றக் கூடிய புரோபலின் வாயு உள்ளது. லாரி விபத்துக்குள்ளானதில் மூன்று வால்வுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

Summary

Traffic on Pune-Mumbai Expressway diverted after highly inflammable gas leak from tanker

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.