
மும்பையின் முதல் பெண் மேயராக ரிது தாவ்டே?
மும்பை மாநகராட்சிக்கு மேயர் பதவிக்கு ரிது தாவ்டேவை வேட்பாளராக பாஜக அறிவிப்பு

ரிது தாவ்டே - X | Ritu Tawde
மும்பை மாநகராட்சிக்கு மேயர் பதவிக்கு ரிது தாவ்டேவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலத்தின் மும்பையை கைப்பற்ற பாஜக நீண்டகாலமாக போராடி வருகிறது. இந்த நிலையில், மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 89 இடங்களில் வெற்றிபெற்று, தனிப் பெரும் கட்சியாக மாறியது. இருப்பினும், கூட்டணிக் கட்சியான சிவசேனை 29 இடங்களை மட்டுமே பெற்றது.
இதனைத் தொடர்ந்து, மும்பை மேயர் பதவிக்கு வேட்பாளர் அறிவிப்பதற்கு இரு தரப்பிலும் போட்டி எழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மும்பை மேயர் பதவிக்கு வேட்பாளராக 132-வது வார்டு உறுப்பினர் ரிது தாவ்டேவை பாஜக அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல் பிப்ரவரி 11 ஆம் தேதியில் நடக்கவிருக்கிறது.
இதன் மூலம், 1997 முதல் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக சிவசேனை கட்சி அல்லாத ஒருவர் மும்பை மேயராக பதவியேற்கவுள்ளார்.
மேலும், துணை மேயர் பதவிக்கு சஞ்சய் காதியை சிவசேனை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, துணை மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர் அடுத்த 15 மாதங்களுக்கு மட்டுமே பதவி வகிப்பார் என்றும், பலருக்கும் வாய்ப்பு கொடுக்கும் நோக்கில், 5 ஆண்டுகளில் 4 பேருக்கு துணை மேயர் பதவி அளிக்க சிவசேனை திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Summary
BJP names Ritu Tawde as Mumbai mayor candidate
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





