பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

டிவி சப்தத்தை குறைக்க சொன்ன கணவரைக் கொன்ற மனைவி!

டிவி சப்தத்தை குறைக்க சொன்ன கணவரைக் கொன்ற மனைவி பற்றி...

கொலை

Published On :

ஆந்திரத்தில் டிவி சப்தத்தை குறைக்கச் சொன்னதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவரை கத்தியால் குத்தி மனைவி கொலை செய்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள டிட்கோ வீட்டுவசதி காலனியில் ஷேக் அகமது (வயது 27) மற்றும் அவரது மனைவி கிராந்தி வசித்து வந்தனர்.

ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் ஷேக் அகமது வியாழக்கிழமை இரவு வீடு திரும்பிய நிலையில், அவரது மனைவி டிவியை அதிக சப்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டிவியின் சப்தத்தை குறைக்குமாறு ஷேக் அகமது கூறிய நிலையில், அவரது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஷேக் அகமதுவை அவரது மனைவி கிராந்தி கத்தியால் குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ஷேக் அகமது உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஷேக் அகமது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், கிராந்தியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Wife kills husband for asking him to turn down the TV volume!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.