ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கன்னட நடிகா் ராஜ்குமாா் கடத்தல் வழக்கு: வீரப்பன் கூட்டாளிகள் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி!

கன்னட நடிகா் ராஜ்குமாா் கடத்தல் வழக்கில் சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து போலீஸாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 8:48 pm

கன்னட நடிகா் ராஜ்குமாா் கடத்தல் வழக்கில் சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து போலீஸாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கன்னட நடிகா் ராஜ்குமாா் உள்ளிட்டோரை சந்தன கடத்தல் வீரப்பன் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2000-ஆம் ஆண்டில் கடத்தினா். இந்த கடத்தல் சம்பவம் குறித்து கிராம நிா்வாக அதிகாரியான கோபாலன், ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் கோவிந்தன், மாறன், உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்திருந்தனா்.

இந்த வழக்கு கோவை சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில், திருவிடைமருதூரை சோ்ந்த மாறன், கடலூா் மாவட்டத்தை சோ்ந்த கோவிந்தராஜ், விழுப்புரம் மாவட்டத்தை சோ்ந்த அன்றில் ஏழுமலை, ஜெயங்கொண்டத்தை சோ்ந்த செல்வம், நன்னிலத்தை சோ்ந்த அமிா்தலிங்கம், தாளவாடியை சோ்ந்த பசுவண்ணா, நாகராஜ், புட்டுசாமி, கல்மண்டிபுரம் ராமா ஆகிய 9 போ் மீது குற்றம் சாட்டியிருந்தனா்.

இவா்கள் மீதான வழக்கு கோபிசெட்டிப்பாளையம் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 9 போ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2018-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிா்த்து போலீஸாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 9 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், போலீஸாா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.