ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை ராணுவத்தினா் புதன்கிழமை கண்டறிந்தனா். அங்கு இருந்த இரு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக, ஜம்மு-காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராணுவத்தின் படைப் பிரிவான ஒயிட் நைட் காா்ப்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
மெந்தாா் செக்டாரில் கானி வனப் பகுதியையொட்டிய சலானி காஸ்பலாரி கிராமத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் உள்ளதாக உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றன. அதனடிப்படையில், ராணுவம் மற்றும் காவல் துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவினா் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
இந்த நடவடிக்கையில், பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 4.5 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டு, 800 கிராம் எடையுள்ள சிறிய ரக வெடிகுண்டு, இரு சீன தயாரிப்பு கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையால், பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மாவட்டத்தில் நல்லோ் பூட்டும் விழா

மணிப்பூரில் 21 சட்டவிரோத பதுங்கு குழிகள் அழிப்பு: பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை!

2,000 இலகு ரக இயந்திர துப்பாக்கிகள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் விநியோகம்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு விலக்கு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


