1 நிமிடத்துக்கு 1,336 பிரியாணிகள்! விருப்பமான உணவுடன் புத்தாண்டைக் கொண்டாடிய இந்தியர்கள்!

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்தியாவில் நிமிடத்துக்கு 1,336 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டது குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

இந்தியாவில், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நிமிடத்துக்கு 1,336 பிரியாணிகள் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2026 எனும் புதிய ஆண்டின் துவக்கம் உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில், நாட்டின் முக்கிய நகரங்களில் புதன்கிழமை (டிச. 31) மாலை முதல் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், இந்தியாவில் நேற்று இரவு 8 மணிக்குள் ஒரு நிமிடத்திற்கு சுமார் 1,336 பிரியாணிகளை ஸ்விக்கி செயலி மூலம் இந்தியர்கள் ஆர்டெர் செய்து வாங்கியதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில், ஒரே நாளில் இரவு 7.30 மணிக்குள் சுமார் 2,18,993 பிரியாணிகள் ஆன்லைன் செயலிகள் மூலம் ஆர்டர் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பிரியாணி பெரும்பாலான இந்தியர்களின் பிரியமான உணவாகக் கருதப்படுகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டில், நொடிக்கு 3.25 ஆர்டர்கள் வீதம் சுமார் 9 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் இந்தியாவில் வாங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களின் கொண்டாட்டங்களில் பிரதான இடத்தை பிரியாணி பிடித்துள்ள நிலையில், புத்தாண்டு நிகழ்விற்காக, தனிநபர் ஒருவர் செயலி மூலம் 16 கிலோ பிரியாணியை ஆர்டர் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கோப்புப் படம்
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்!
Summary

In India, 1,336 biryanis were ordered every minute on Swiggy in the lead-up to the New Year celebrations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com