

வெனிசுவேலாவுக்கு ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவுக்கும் ஏற்படலாம் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப்ரித்விராஜ் சாவன் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, இந்திய நலனுக்கு எதிரான ஆன்டி இந்தியன் மனநிலையிலேயே காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
வெனிசுவேலாவுடன் இந்தியாவை ஒப்பிடுவது மிகவும் தவறு என்றும், நாளுக்கு நாள் காங்கிரஸ் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
வெனிசுவேலாவுக்கு நேர்ந்த நிலை நாளை இந்தியாவுக்கும் ஏற்படும் என வெனிசுவேலாவின் நிலையை சற்றும் தயக்கமின்றி இந்தியாவுடன் ஒப்பிடுகிறார் காங்கிரஸ் தலைவர் ப்ரித்விராஜ் சாவன். காங்கிரஸ் தலைவர்கள் ஆன்டி இந்தியன் மனநிலையில் இருப்பவர்கள் என்பது இதன்மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் காவல் துறை தலைமை இயக்குநர் எஸ்.பி. வைத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
காங்கிரஸ் தலைவர்கள் இந்திய நலனுக்கு எதிரான கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் சில காங்கிரஸ் தலைவர்கள் விரக்தியில் இருப்பது தெரிகிறது. இதனைச் சொல்வதற்கு முன்பு உங்கள் தலை ஏன் வெட்கித் தலைகுனியவில்லை.
நீங்கள் நாட்டின் குடிமகன் இல்லையா? அதிபர் டிரம்ப்பும் அமெரிக்காவும் செய்தது வெனிசுவேலாவுக்கு அவமானகரமான செயல். இது இந்தியாவுக்கு நடக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.