

பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சியை அழிக்க முயல்வதாக, சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் முதன்மையான சிவசேனை கட்சி, முன்னாள் முதல்வர்கள் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் இரண்டு அணிகளாகப் பிளவுப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மோடி பிரதமாரவதற்குப் பிரசாரம் செய்ததை நினைத்து வருந்துவதாக, சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“மோடி பிரதமராவதற்கு 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பிரசாரம் செய்ததை நினைத்து நான் வருத்தமும் கோபமும் அடைகிறேன். அவருக்கு இரண்டுமுறை நான் உதவி செய்தபோதும் அவர் (பிரதமர் மோடி) என் கட்சியை உடைத்துவிட்டார்.
அவர் நிச்சயம் பிரதமராக வேண்டுமென நான் கூறியிருந்தேன். ஆனால், அவர் இப்போது என்னை முடித்துவிட வேண்டும் எனக் கூறுகிறார்.
இப்போது, அவர்கள் பாலாசாகேப் தாக்கரே இல்லை, அதனால் சிவசேனையை முடித்து விட்டதாக நினைக்கின்றனர். ஆனால், அவர்களால் அதைச் செய்ய முடியாது. பாலாசாகேப் இருந்தவரை பாஜகவினர் நேர்வழியில் செயல்பட்டனர்.” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மும்பை நகரத்தைத் தனியாகப் பிரிப்பது பாஜகவின் நெடுநாள் கனவு எனவும் அவர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.