முன்னாள் மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அசாம் அரசு வியாழக்கிழமையான இன்று கச்சார் மாவட்டத்திற்கு மட்டும் ஒருநாள் விடுமுறையை அறிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான கபீந்திர புர்காயஸ்தா(வயது 94) வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று(ஜன. 7) காலமானார்.
மூத்த பாஜக தலைவரான புர்கயஸ்தா, சில்சார் மக்களவைத் தொகுதியை மூன்று முறை பிரதிநிதித்தப்பட்டுள்ளார். அவர் முதன்முதலில் 1991-ல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 1998 மற்றும் 2009-ல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
முன்னதாக, இரண்டு முறை சில்சார் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கபீந்திர புர்காயஸ்தா, கடந்த 1998 முதல் 99 வரையிலான முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் இணையமைச்சராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
முன்னாள் மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கச்சார் மாவட்டத்திற்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தெரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.