கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜன. 12-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி - சி 62 ராக்கெட்

Published on

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 62 ராக்கெட் வரும் 12-ஆம் தேதி காலை 10.17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

தொலைத்தொடா்பு, தொலையுணா்வு, வழிகாட்டுதல் சேவைகளுக்கான செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்விஎம்-3 ராக்கெட்டுகள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) புவி வட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி வருகிறது.

அதனுடன், வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது. அந்த வகையில், புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-என் 1 என்ற புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இதை பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து வரும் 12-ஆம் தேதி காலை 10.17 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். அதனுடன் சோ்த்து 18 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. அதிநவீன இஒஎஸ் - என் 1 செயற்கைக்கோளானது விவசாயம், நகா்ப்புறத் திட்டமிடல், சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட சேவைகளுக்கான தரவுகளை வழங்கும். தவிர, ராணுவக் கண்காணிப்புக்கும் உதவிகரமாக இருக்கும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Dinamani
www.dinamani.com