

அயோத்தி ராமர் கோயில் வளாகத்திற்குள் தொழுகை செய்ய முயன்ற பெண் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி வளாகத்திற்குள் பெண் உள்பட 3 பேர் டி1 வாயில் வழியாக சனிக்கிழமை நுழைந்தனர். பின்னர் அதில் இளைஞர் ஒருவர் கோயில் சமையலறைக்கு அருகில் அமர்ந்து தொழுகை செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் மூவரையும் தடுத்துநிறுத்தியதோடு கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட நபர்கள் காஷ்மீரி உடையை அணிந்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் ஜம்மு - காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த அபு அகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டார். மேலும் பெண் சோபியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மூன்றாவது இளைஞரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது மூவரும் மத முழக்கங்களை எழுப்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உளவுத்துறை அமைப்புகள், உள்ளூர் காவல்துறை மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தனர்.
இருப்பினும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. மேலும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.