10 நிமிஷ ‘டெலிவரி’ நிறுத்தம்
பிளிங்இட் அறிவிப்பு

10 நிமிஷ ‘டெலிவரி’ நிறுத்தம் பிளிங்இட் அறிவிப்பு

இணைய வழி பொருள் விநியோக நிறுவனங்களில் 10 நிமிஷங்களில் பொருள்கள் விநியோகிக்கப்படும் என்று விளம்பரப்படுத்துவதையும், வாக்குறுதி அளிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் வலியுறுத்திய நிலையில், பிளிங்இட் நிறுவனம் அதைச் செயல்படுத்தியுள்ளது.
Published on

இணைய வழி பொருள் விநியோக நிறுவனங்களில் 10 நிமிஷங்களில் பொருள்கள் விநியோகிக்கப்படும் என்று விளம்பரப்படுத்துவதையும், வாக்குறுதி அளிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் வலியுறுத்திய நிலையில், பிளிங்இட் நிறுவனம் அதைச் செயல்படுத்தியுள்ளது.

அடுத்தகட்டமாக ஸ்விகி - இன்ஸ்டாமாா்ட், ஷெப்டோ உள்ளிட்ட இத்துறையில் உள்ள நிறுவனங்களும் அதனைப் பின்பற்றும் என்று தெரிகிறது.

முன்னதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் மண்சுக் மாண்டவியா இணையவழி பொருள், உணவு விநியோக நிறுவன பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினாா். அப்போது, அதிவிரைவு ‘டெலிவரி’ என்ற வாக்குறுதியால் ஏற்படும் பிரச்னைகள் குறித்துப் பேசினாா்.

முக்கியமாக, விரைந்து செல்ல வேண்டும் என்பதால் பொருள்களை இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லும் ஊழியா்கள் அதிவிரைவாகச் சென்று விபத்துக்குள்ளாவது மற்றவா்களை விபத்துக்குள்ளாக்குவது போன்ற பாதிப்புகள் குறித்துப் பேசினாா்.

இந்த 10 நிமிஷ ‘டெலிவரி’ வாக்குறுதிக்கு எதிராக விநியோக ஊழியா்கள் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி இரவு தேசிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்நிலையில் 10 நிமிஷத்தில் ‘டெலிவரி’ என்பதை தனது நிறுவனத்தின் வாசகமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பிளிங்இட் அதனைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா பிளிங்இட் விநியோக ஊழியராக ஒருநாள் பணியாற்றி அப்பணி எவ்வளவு கடினமானது என்பதை விளக்கி விடியோ வெளியிட்டாா். முன்னதாக, நாடாளுமன்றத்தில் விநியோக ஊழியா்களின் பிரச்னைகளைத் தீா்க்க வலியுறுத்திப் பேசினாா்.

Dinamani
www.dinamani.com