என்ஐஏ தலைவராக ராகேஷ் அகா்வால் நியமனம்

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைவராக ராகேஷ் அகா்வால் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.
Published on

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைவராக ராகேஷ் அகா்வால் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.

1994-ஆம் ஆண்டின் ஹிமாசல பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அவா், கடந்த ஆண்டு செப்டம்பரில் என்ஐஏ சிறப்பு தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். பின்னா் அந்த ஆண்டு டிசம்பரில், அவரை என்ஐஏ இடைக்காலத் தலைவராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டது.

இந்நிலையில் அவரை என்ஐஏ தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவா் பணி ஓய்வுபெறும் நாளான 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 வரை, அந்தப் பதவியில் நீடிப்பாா் என்று மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com