

பெங்களூரு : கர்நாடகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மே 25-ஆம் தேதிக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பெங்களூரு உள்ளாட்சித் தேர்தலை ஜூன் 30க்குள் நடத்த கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தையும் மாநில அரசையும் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கேட்டுக் கொண்டது. அதனையடுத்து, பெங்களூரு பெருநகர ஆணையத்துக்கு (ஜிபிஏ) உள்பட்ட 5 மாநகராட்சிகளுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தபின், மே மாதம் 25க்குப் பின், தேர்தல் நடைபெறும் என்று கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் ஜி. எஸ். சங்க்ரேஷி திங்கள்கிழமை(ஜன. 19) தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.