கர்நாடக சட்டப்பேரவையில் பட்டியலினத்தவருக்கு 36, பழங்குடியினருக்கு 15 இடங்கள் உள்ளன. 2023-இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸýக்கு 36-இல் 21 பட்டியலின எம்எல்ஏக்களும், 15-இல் 14 பழங்குடியினர் எம்எல்ஏக்களும் உள்ளனர். இவர்களில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வர், எச்.சி. மகாதேவப்பா, கே.எச். முனியப்பா, பிரியாங்க் கார்கே, ஆர்.பி. திம்மாப்பூர், பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த சதீஷ்ஜார்கிஹோளி ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த பி. நாகேந்திரா, கே.என். ராஜண்ணா இருவரும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.