

உத்தரப் பிரதேசம், குஷிநகர், துதாஹி நகரில் 20 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லால் பகதூர் சாஸ்திரி நகரின் 9-வது வார்டில் தனது கணவரின் வீட்டில் வசித்து வருபவர் நேஹா ஜெய்ஸ்வால். இவருக்கு திருமணமாகி 56 நாள்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், வரதட்சணை கேட்டு அந்தப் பெண் துன்புறுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காவல்துறையின் படி, பிப்ரா ஜந்தாம்பூரைச் சேர்ந்த கணேஷ் ஜெய்ஸ்வாலின் மகள் நேஹா ஜெய்ஸ்வால், கடந்தாண்டு நவம்பர் 22 அன்று விவேக் ஜெய்ஸ்வால் (24) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நேஹா குடும்பத்தினருக்கு காலை உணவு தயாரித்துவிட்டு தனது அறைக்குச் சென்ற நேஹா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், ஜன்னலை திறந்துபார்கையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, குடும்பத்தினர் காவல்துறைக்கும் நேஹாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.
நேஹாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக விஷ்ணுபுரா காவல் நிலைய ஆய்வாளர் வினய் மிஸ்ரா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.