சபரிமலை கோயில் நடை அடைப்பு!

சபரிமலை கோயில் நடை அடைக்கப்பட்டது தொடர்பாக...
சபரிமலை கோயில் (கோப்புப்படம்)
சபரிமலை கோயில் (கோப்புப்படம்)
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மகரவிளக்கு பூஜை நிறைவடைந்த நிலையில், இன்று(ஜன. 20) கோயில் நடை அடைக்கப்பட்டது.

நேற்று இரவோடு பக்தர்களுக்கான தரிசனம் நிறைவடைந்த நிலையில், இன்று(ஜன. 20) காலை பந்தளம் அரச குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்துக்குப் பின் 'ஹரிவராசனம்' பாடி கோயில் நடை அடைக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரவிளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டுக்கான மகரவிளக்கு பூஜை புதன்கிழமை (ஜன.14) நடைபெற்றது.

சபரிமலையில் ஏற்றப்படும் மகர ஜோதியை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். அசம்பாவிதம் நேரிடாமல் தவிர்க்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

வருடாந்திர மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிச. 30-ல் திறக்கப்பட்டு, முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம், ஜன.14-இல் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று(ஜன. 20) காலை பந்தளம் அரச குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்துக்குப் பின் 'ஹரிவராசனம்' பாடி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது.

Summary

Following the conclusion of the annual Makaravilakku puja at the Sabarimala Ayyappan temple, the temple was closed today (Jan. 20).

சபரிமலை கோயில் (கோப்புப்படம்)
தமிழக அரசின் உரையை வாசிப்பாரா ஆளுநர் ஆர்.என். ரவி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com