

மதுபான மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் ஓய்எஸ்ஆர்சிபி முன்னாள் எம்பி விஜயசாய் ரெட்டி அமலாக்கத்துறையில் இன்று ஆஜரானார்.
முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி. ஆட்சியின்போது ஆந்திரப் பிரதேசத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ. 3,500 கோடி மதுபான 'மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்காகச் சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இன்று விஜயசாய் ரெட்டி ஆஜராகியுள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.
கடந்த 2019 மற்றும் 2024-க்கு இடையில் ஆந்திரப் பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது.
ஆந்திரப் பிரதேச சிறப்பு புலனாய்வுக் குழுவால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ரெட்டி குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளார். மேலும், இந்த வர்த்தகத்தின் சட்டவிரோத நிதிகள் அவரின் மூலம் முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யின் மூத்த தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஒரு அரசியல் சதியின் விளைவு என்று முன்னாள் முதல்வர் கூறியுள்ளார்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் புகாரை ஏற்றுக்கொண்டு, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) செப்டம்பர் 2025-ல் இந்த முறைகேடு குறித்து விசாரிக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கைப் பதிவு செய்தது.
விஜயசாய் ரெட்டி அதன் பிறகு ஒய்எஸ்ஆர் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.