

இந்திய அணியின் பேட்டர் அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை எடுத்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஆண்ட்ரே ரஸலிடம் இந்தச் சாதனை இருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
குறைவான பந்துகளில் 5,000 டி20 ரன்களைக் கடந்தவாராக அபிஷேக் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அபிஷேக் சர்மா மொத்தம் 165 இன்னிங்ஸில் 5,002 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8 சதங்கள், 29 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
அதிவேகமாக 5,000 ரன்கள் அடித்த வீரர்கள்
1. அபிஷேக் சர்மா - 2,898 பந்துகள் (இந்தியா)
2. ஆண்ட்ரே ரஸல் - 2,942 பந்துகள் (மே.இ.தீவுகள்)
3. டிம் டேவிட் - 3,127 பந்துகள் (ஆஸி.)
4. வில் ஜேக்ஸ் - 3,196 பந்துகள் (இங்கிலாந்து)
5. க்ளென் மேக்ஸ்வெல் - 3,239 பந்துகள் (ஆஸி.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.