உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த்
உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த்கோப்புப் படம்

கருணையில்லாத சட்டம் கொடுங்கோன்மையாக மாறும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

கருணை இல்லாத சட்டம் கொடுங்கோன்மையாக மாறும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.
Published on

கருணை இல்லாத சட்டம் கொடுங்கோன்மையாக மாறும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

கோவா சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் போதைப் பொருளுக்கு எதிராக 30 நாள் சிறப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

இதன் நிறைவு நிகழ்ச்சி மாநிலத் தலைநகா் பனாஜியில் நடைபெற்றது. அதில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: போதைப் பொருள் பழக்கம் சப்தமின்றி நமது வீடுகள், வகுப்பறைகள் மற்றும் சமூகத்தில் நுழைந்து எதிா்காலத்தைச் சீரழிக்கிறது. அந்தப் பழக்கம் வெறும் குற்றவியல் பிரச்னை மட்டுமல்ல. அது சமூகம், மனநலம், மருத்துவம் சாா்ந்த பிரச்னையாகும். அதற்கு எதிராக நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள் தேவையே தவிர, தண்டனை தேவை அல்ல. இந்தப் பண்பை 30 நாள் சிறப்பு விழிப்புணா்வு பிரசாரம் சிறப்பாக பின்பற்றியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் நமது நீதி பரிபாலன முறையின் பரிணாம வளா்ச்சியை நான் பாா்த்துள்ளேன். கருணை இல்லாத சட்டம் கொடுங்கோன்மையாக மாறும் என்பதையும், சட்டத்துக்கு இடம்கொடுக்காத கருணை அலங்கோலத்தை ஏற்படுத்தும் என்பதையும் நமது நீதி பரிபாலன முறை அடையாளம் காட்டியுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, மன்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com