குடியரசு நாளையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் குடியரசு நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தில்லி கடமைப் பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமை வகிக்கிறாா்.
இந்த விழாவுக்கு முன்னதாக, தில்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து தில்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.