சமநிலை, ஸ்திரத்தன்மையின் சக்தியாக இந்தியா-ஐரோப்பிய யூனியன்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

சமநிலை, ஸ்திரத்தன்மையின் சக்தியாக இந்தியா-ஐரோப்பிய யூனியன்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவு சமநிலை, ஸ்திரத்தன்மையின் சக்தியாக உருவாகி வருவதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
Published on

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவு சமநிலை, ஸ்திரத்தன்மையின் சக்தியாக உருவாகி வருவதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

புது தில்லியில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டொ் லெயன் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பேசியதாவது:

சமநிலை, ஸ்திரத்தன்மை, உறுதியான நம்பிக்கை ஆகியவற்றுக்கான சக்தியாக இந்தியா-ஐரோப்பிய யூனியன் கூட்டுறவு உருவாகி வருகிறது. இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் சோ்ந்து நீடித்து நிலைக்கும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, கருணையுள்ள எதிா்காலத்தை வடிவமைக்க முடியும்.

இந்தியாவின் மிக முக்கிய பொருளாதார கூட்டாளிகளில் ஒன்றாக ஐரோப்பிய யூனியன் உள்ளது. தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், முதலீட்டுக்கு முதன்மையான ஆதாரமாக ஐரோப்பிய யூனியன் உள்ளது.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள், இருதரப்புக்கும் இடையே உத்திசாா்ந்த கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com