

விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் சென்ற விமானம் புணே மாவட்டத்தின் பாராமதியில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜீத் பவார் உள்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர்.
இந்த நிலையில், அஜீத் பவாரின் மறைவுக்கு காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மற்றும் சக பயணிகள் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில் மகாராஷ்டிர மக்களுடன் நான் துணை நிற்கிறேன்.
இந்த துக்க நேரத்தில் அஜீத் பவாரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.