நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது!
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று (ஜன. 28 ) தொடங்கியது.
நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றி வருகிறார்.
இன்று தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப். 2-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதல் கட்ட அமர்வு பிப். 13 வரையும், இரண்டாம் கட்ட அமர்வு மாா்ச் 9 முதல் ஏப். 2 வரையும் நடைபெறுகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றி வருகிறார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிப். 2 முதல் மூன்று நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், 2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப். 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மிக அரிதான நிகழ்வாகும். மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். நாளை (ஜன.29) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
Amidst a tense political atmosphere, the parliamentary budget session began today (Jan. 28) with the President's address.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

