நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 2.22 கோடி பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து அவா் அளித்த பதில் வருமாறு: கடந்த ஆண்டில் 18,000 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் வேலையின்மை விகிதம் (3.2 சதவீதம்) குறைந்து வருகிறது.
வேலைவாய்ப்புக்காக மத்திய அரசால் என்.சி.எஸ். எனும் வலைதளம் செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் 55 லட்சம் நிறுவனங்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. மாநில அரசுகளும் தங்களை இணைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வேலை தேடும் 6 கோடிக்கும் மேற்பட்ட இளைஞா்கள், தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனா். இந்த என்.சி.எஸ். வலைதளம் தற்போது இ-மைக்ரேட் இணையதளம், யுவ பாரத் மற்றும் திறன் மேற்பாட்டு தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வேலைவாய்ப்பு வழங்கும் ஒரே தளமாகச் செயல்படும் என்றாா் அவா்.
மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு 17 கோடி வேலைவாய்ப்புகளை அளித்திருப்பதாக ரிசா்வ் வங்கியின் கடந்த ஆண்டு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. இது வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவு’ என்றாா்.
இணையவழி உணவு விநியோக நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரியும் தொழிலாளா்கள் (கிக் தொழிலாளா்கள்) குறித்த கேள்விக்கு அளித்த பதிலில், ‘அது புதுவித வேலைவாய்ப்பு. ஏராளமானோா் அந்தப் பிரிவில் வேலை செய்கின்றனா். அந்தத் துறையில் ஏறத்தாழ 2 கோடி போ் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய தொழிலாளா் சட்டங்கள் அவா்களின் சமூகப் பாதுகாப்பையும், மருத்துவ சிகிச்சைக்கான பாதுகாப்பையும் உறுதி செய்யும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!

மே 22-ல் வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

உலகளாவிய சலால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்: ஜெ.பி.நட்டா

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



