

மத்திய நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து 9-ஆவது முறையாக தாக்கல் செய்யும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் புகழ்ந்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 2026 - 27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 1) நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதாவது : “நிர்மலா சீதாராமன், இந்த நாட்டில் ஒரு பெண் நிதியமைச்சராக, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 9-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இத்தருணம் இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலொரு பெருமைக்குரிய விஷயமாகப் பதிவாகி நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.