அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

கடத்தல் வழக்கில் கும்பமேளா புகழ் மோனலிசா கணவரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

கும்பமேளா புகழ் மோனலிசாவின் கணவருக்கு கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

News image

காதலன் ஃபர்மான் கானுடன் மோனலிசா

Updated On :2 ஜூலை 2026, 4:46 pm IST

கும்பமேளா புகழ் மோனலிசாவின் கணவருக்கு கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கும்பமேளாவில் மணிமாலை விற்பனை செய்து வைரலானவர் மோனலிசா போஸ்லே. அவருக்கு பின்னர் சில திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன.

இவர் முகநூலில் அறிமுகமான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஃபர்மான் (25) எனும் இளைஞரைக் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு மோனலிசாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரளத்தில் இருவருக்கும் மார்ச் 11 அன்று திருமணம் நடைபெற்றது.

மோனலிசா குடும்பத்தினர் பிரச்னை செய்த நிலையில் தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு திருவனந்தபுர காவல் நிலையத்தில் மோனலிசா கோரிக்கை விடுத்திருந்தார். மோனலிசா 18 வயது நிரம்பியவர் என்பதை உறுதி செய்த காவல் துறையினர் அவரை காதலருடன் செல்ல அனுமதித்தனர். இந்த விவகாரத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், தேசிய பழங்குடியினர் ஆணையத்தினர் நடத்திய விசாரணையில் மோனலிசா 2009 ஆம் ஆண்டில் பிறந்தவர் என்றும், 18 வயது பூர்த்தியடையாத அவர் திருமணத்துக்கான போலியாக பிறப்புச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மோனலிசாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஃபர்மான் கான் மீது கடத்தல் மற்றும் போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுக கூடுதல் அவகாசம் கேட்டு ஃபர்மான் கான் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக, மோனலிசா மற்றும் ஃபர்மான் தாக்கல் செய்திருந்த 'டிரான்சிட்' முன்ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள உரிய அதிகார வரம்புடைய நீதிமன்றத்தை அணுகி ஒரு மாதத்திற்குள் முன்ஜாமீன் கோருவதற்கு அனுமதி வழங்கியது. அதில், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஃபர்மான் கான் தெரிவித்திருந்தார்.

இந்தக் கோரிக்கையை எதிர்த்து, மத்தியப் பிரதேச காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஃபர்மானின் முன்ஜாமீன் மனுவை மத்தியப் பிரதேச சிறப்பு நீதிமன்றம் ஜூலை 1 அன்று தள்ளுபடி செய்ததாகத் தெரிவித்தார்.

அதனை, நீட்டிப்பதற்கான அதிகாரம் கேரள உயர் நீதிமன்றத்திற்கு இல்லை எனக் குறிப்பிடப்பட்ட நிலையில் ஃபர்மான் கான் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

Summary

Bail plea of ​​Kumbh Mela fame Monalisa husband rejected in kidnapping case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.