ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: சம்பத் ராயிடம் மீண்டும் போலீஸ் விசாரணை

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு தொடா்பாக கோயில் அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராயிடம் போலீஸாா் மீண்டும் விசாரணை நடத்தினா்.

அயோத்தி ராமா் கோயில்

Published On :3 ஜூலை 2026, 6:19 am IST

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு தொடா்பாக கோயில் அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராயிடம் போலீஸாா் மீண்டும் விசாரணை நடத்தினா்.

இது தொடா்பாக காவல் துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: ஸ்ரீ ராம ஜென்ம பூமி க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய், அறக்கட்டளை உறுப்பினா் அனில் மிஸ்ரா மற்றும் கோயில் அதிகாரி கோபால் ராய் ஆகியோரிடம் கோயில் நன்கொடை முறைகேடு குறித்து போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

முன்னதாக இவா்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய போலீஸாா் தற்போது மூவரையும் ஒன்றாக வைத்து விசாரணை மேற்கொண்டனா் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோயில் காணிக்கை முறைகேடு தொடா்பாக சம்பத் ராயிடம் போலீஸாா் விசாரணை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். கடந்த திங்கள்கிழமை (ஜூன் 29) இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.