ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு!

புணேயில் சனிக்கிழமை பெய்த கனமழையால் பல சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Pune sees heavy rains; waterlogging, two landslides reported

புணே. - Photo grab PTI video

Published On :4 ஜூலை 2026, 9:15 pm IST

புணேயில் சனிக்கிழமை பெய்த கனமழையால் பல சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் சனிக்கிழமை கனமழை பெய்ததுடன், இரு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டன. எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழையைத் தொடர்ந்து பல சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நகரம் முழுவதும் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாகப் பெய்த இந்த மழையானது, மாவட்டத்தின் முக்கிய அணைகளான கடக்வாஸ்லா உள்ளிட்ட நீர்நிலைகளின் வரத்தை அதிகரித்துள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாக அவர்கள் மேலும் கூறினர்.

இதுகுறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "சனிக்கிழமை மதியம் லோனாவாலா சாலைக்கு அருகில் உள்ள காடல் நீர்வீழ்ச்சியையொட்டி ராஜ்மாச்சி கோட்டைக்கு அப்பால் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது சாலையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், சனிக்கிழமை மதியம் ஜுன்னார் காவல் எல்லைக்குட்பட்ட இங்லுன் காட் பகுதியிலும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகளும் மண்ணும் சாலையில் விழுந்ததால், தற்போது ஒரு வழிப் போக்குவரத்து மட்டுமே இயங்குகிறது" என்று தெரிவித்தார்.

இதனிடையே புணே நகரப் பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கையும், மாவட்டத்தின் மலைப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையும் கனமழை தொடர வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Summary

Pune witnessed heavy rains on Saturday, resulting in waterlogging on several roads as well as a couple of landslide incidents, though no one was hurt in these, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.