தில்லியில் கட்டணமில்லா பேருந்து சேவையை மகளிர் பயன்படுத்துவதில் மாநில போக்குவரத்துக் கழகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
தில்லியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்க வேண்டுமெனில், பிங்க் தோழி அட்டையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தில்லி போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பேருந்துகளில் பெண்கள் பயணிக்கும்போது தங்களுடன் பிங்க் தோழி அட்டையைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பிங்க் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இல்லையெனில், பெண்களும் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிவரும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.
காகிதத்தாலான டிக்கெட்டுகள் செயல்முறையை நீக்கி, ஸ்மார்ட் (பிங்க் தோழி அட்டை) அட்டைகளை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
இந்த அட்டைகளை வழங்குவதை எளிதாக்கும்வகையில், மாநிலம் முழுவதும் 50 அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இதுவரையில் சுமார் 11 லட்சம் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் 13 லட்சமாக உயர்த்தப்படவுள்ளது.
Summary
No free bus travel for women in Delhi without Pink Saheli card from Augest 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் பயணிகளுக்கான ’பிங்க் டிக்கெட்’ வசதி: ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்க வாய்ப்பு

அரசு ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா மருத்துவம்: மாநிலத் தலைவா் வலியுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுப்பு சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் இலவச பயண டோக்கன்! எங்கெல்லாம் வழங்கப்படும்?
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |




