FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது காகிதங்களை வீசி எறிந்து, திட்டிய வழக்குரைஞரால் பரபரப்பு!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்குரைஞர் ஒருவர் காகிதங்களை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...

News image
Updated On :10 ஜூலை 2026, 7:51 pm IST

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்குரைஞர் ஒருவர் காகிதங்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தனது ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, வழக்குரைஞரான பிரபல் பிரதாப் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அவரின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் நீதிபதி அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதற்காக பிரபல் பிரதாப் இன்று (ஜூலை 10) உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

நீதிபதிகளின் விசாரணையின்போது, “லக்னௌ விகாஸ் நகர் உதவி காவல் ஆணையர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடுமாறு நான் உங்களுக்கு உத்தரவிடுகிறேன்” என்று அந்த வழக்குரைஞர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அந்தக் கருத்தைக் கேட்டு அதிருப்தியும் ஆச்சரியமும் அடைந்த நீதிபதி விஸ்வநாதன், “நீங்கள் எங்களுக்கு உத்தரவிடுகிறீர்களா?” என்று அவரிடம் கேள்வியெழுப்பிருக்கிறார்.

இதைக்கேட்டு விரக்தியடைந்த வழக்குரைஞர் பிரபல் பிரதாப், அவர் கையில் வைத்திருந்த காகிதங்களை நீதிபதிகள் மீது வீசியெறிந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்தையும் தகாத சொற்களில் கடுமையாகத் திட்டி வசைபாடியிருக்கிறார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உச்ச நீதிமன்றப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரைக் அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

இதுபோன்ற எதிர்பாராத சம்பவம் உச்சநீதிமன்றத்தில் அரங்கேறியபோதிலும், எந்தவித சலசலப்புமின்றி, மீதமுள்ள வழக்குகளை நீதிபதிகள் விசாரித்தனர். மேலும், அந்த வழக்குரைஞர் மீது நீதிபதிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மனுதாரர் இவ்வாறு செய்துள்ளார். மனுதாரரின் நடத்தைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

Summary

The Supreme Court on Friday (July 10) witnessed unusual scenes during the hearing of an appeal filed by a petitioner-in-person. The petitioner engaged in disorderly conduct, hurling case papers in the courtroom and using foul language against the Chief Justice of India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.