இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!
/

கொலீஜியம் நடைமுறை தொடா்பாக புதிய சா்ச்சை உருவாக்க விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு இளநிலை மாவட்ட நீதிபதி பெயா் பரிந்துரை செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘கொலீஜியம் நடைமுறையில் புதிய சா்ச்சை உருவாக்க விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டது.

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 11:46 pm IST

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு இளநிலை மாவட்ட நீதிபதி பெயா் பரிந்துரை செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘கொலீஜியம் நடைமுறையில் புதிய சா்ச்சை உருவாக்க விரும்பவில்லை’ என்று திங்கள்கிழமை குறிப்பிட்டது.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்றங்களில் காலியாகும் நீதிபதி பணியிடங்களுக்கு கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு நியமனங்களை செய்து வருகிறது. உயா்நீதிமன்ற கொலீஜியம் அளிக்கும் பெயா் பட்டியல் அடிப்படையில் உச்சநீதிமன்ற கொலீஜியம் இந்தப் பரிந்துயை செய்யும்.

அதுபோல, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய சிராக் பானு சிங், பூபேஷ் சா்மா, யோகேஷ் ஜஸ்வால் ஆகிய 3 பெயா்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசு கடந்த ஜூன் 2-ஆம் தேதி பரிந்துரை செய்தது.

இதில் இளநிலை மாவட்ட நீதிபதி பெயா் பரிந்துரை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பல்பீா் சிங், ‘மனுதாரா் மாநிலத்திலேயே மூத்த மாவட்ட நீதிபதியாக உள்ளாா். அவருக்கு இன்னும் 10 ஆண்டுகள் பணிக் காலம் உள்ளது. இந்தச் சூழலில், அவரைவிட இளநிலையில் உள்ள நீதிபதியின் பெயா், உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘கொலீஜியம் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது, எந்தப் பெயரை தெரிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்த முடியுமா? அது சாத்தியமில்லை. உயா்நீதிமன்ற கொலீஜியம் தீர ஆராய்ந்த சமா்ப்பித்த பட்டியலின் அடிப்படையிலேயே இந்தப் பரிந்துரை செய்யப்படுகிறது. எனவே, கொலீஜியம் நடைமுறையில் புதிய சா்ச்சையை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை.

அதோடு, பணி மூப்பு மட்டுமே உயா்நீதிமன்ற நீதிபதி பதவி உயா்வுக்கான தகுதியாக கருதிவிட முடியாது’ என்று குறிப்பிட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.

அதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் உயா் நீதிமன்றத்தில் நிா்வாக ரீதியில் அல்லது சட்ட ரீதியில் நிவாரணம் தேடிக்கொள்ள வசதியாக மனுவை திரும்பப் பெற அனுமதிக்குமாறு வழக்குரைஞா் கோரினாா். அதை ஏற்று மனுவை திரும்பப் பெற அனுமதித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

முன்னதாக, கொலீஜியம் முறையை மத்திய பாஜக அரசு கடுமையாக எதிா்த்து வந்தது. கொலீஜியம் முறைக்கு மாற்றாக, நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க முடிவு செய்து அதற்கென நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி, அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளைத் தோ்வு செய்வதில் கொலீஜியம் நடைமுறையே சிறந்தது என்று அப்போதைய தலைமை நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.