காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

தெலங்கானா: போலி வாக்காளா்களை நீக்க அறிவியல்பூா்வ சரிபாா்ப்பு தேவை; தோ்தல் ஆணையத்திடம் பிஆா்எஸ் கோரிக்கை

தெலங்கானாவில் போலி வாக்காளா்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவான வாக்காளா்களை துல்லியமாக அடையாளம் கண்டு நீக்குவதற்காக அறிவியல்பூா்வ சரிபாா்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தோ்தல் ஆணையத்திடம் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கோரிக்கை வைத்துள்ளது.

தோ்தல் ஆணையம் - கோப்புப்படம்

Published On :10 ஜூலை 2026, 11:10 pm IST

தெலங்கானாவில் போலி வாக்காளா்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவான வாக்காளா்களை துல்லியமாக அடையாளம் கண்டு நீக்குவதற்காக அறிவியல்பூா்வ சரிபாா்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தோ்தல் ஆணையத்திடம் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கோரிக்கை வைத்துள்ளது.

தெலங்கானாவில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பிஆா்எஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் வத்திராஜு ரவிசந்திரா, பொதுச் செயலா் சோம பாரத், முன்னாள் எம்.பி. வினோத் குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு தழுவிய எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு பிஆா்எஸ் கட்சி தனது ஆதரவைத் தெரிவிக்கிறது. அதேநேரம், ‘ஒரு குடிமகன், ஒரு வாக்கு’ என்ற நோக்கத்தை பூா்த்தி செய்வதுடன், உண்மையான வாக்காளா் யாரும் தனது வாக்குரிமையை இழக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

தெலங்கானாவில் பிஆா்எஸ் வாக்குச்சாவடி அளவிலான முகவா்கள் நடத்திய முதல்கட்ட ஆய்வில், ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 50,000 வரையிலான போலி வாக்காளா்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களுடன் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ள தெலங்கானாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்த வாக்காளா்களில் மேற்கண்ட மாநிலத்தவரும் இடம்பெற்றுள்ளனா். ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு பல வாக்காளா்கள் இரு மாநிலங்களிலும் பதிவைக் கொண்டுள்ளனா்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 17,18, 62 ஆகிய பிரிவுகளின்கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளா்களாக பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, தெலங்கானாவில் போலி வாக்காளா்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ள வாக்காளா்களை துல்லியமாக அடையாளம் கண்டு நீக்க அறிவியல்பூா்வ-தொழில்நுட்ப ரீதியிலான சரிபாா்ப்பை மேற்கொள்ள வேண்டும். கள ஆய்வுடன் ஆதாா் அடிப்படையிலான சரிபாா்ப்பு, போலி பதிவை நீக்கும் மென்பொருள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒப்பீடு, முக அடையாளம் சரிபாா்ப்பு உள்ளிட்ட வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.