பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

வயநாடு நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது...

Wayanad landslide

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு... - ENS

Published On :

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மெப்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று வரை அங்கு நடைபெற்ற மீட்புப் பணிகளில் நிலச்சரிவில் சிக்கி பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், மாயமான இருவரைத் தேடும் பணிகள் இன்று (ஜூலை 10) காலை மீண்டும் தொடங்கின.

பேரிடரில் மாயமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நில அளவையாளர் ராகேஷ் குச்சாய்த் மற்றும் கட்டுமான மேலாளர் விக்ரம் ரானா ஆகியோரைத் தேடும் பணிகள் 4 ஆவது நாளான இன்று காலை முதல் மீண்டும் தொடங்கிய நிலையில், பலியான ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒருவரைத் தேடும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைப்பதற்காக நடைபெற்று வந்த இந்த சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that the death toll from the Wayanad landslide has risen to seven.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.