இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

இந்தியாவுக்கு கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை: வெளியுறவு அமைச்சகம்

பாகிஸ்தானுக்கு "எந்த தகுதியும் இல்லை" என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது குறித்து...

News image

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் - கோப்புப்படம்

Updated On :18 ஜூலை 2026, 9:03 am IST

புதுதில்லி: இந்தியாவின் உள்விவகாரங்கள் தொடர்பான விஷயங்களில் பாகிஸ்தான் சமீபத்தில் தெரிவித்த கருத்துகளை கடுமையாக நிராகரித்துள்ளது இந்தியா, இதுகுறித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு "எந்த தகுதியும் இல்லை" என்று வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறுகையில்,

பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் குறித்து தலையிடுவதற்கோ, கருத்து தெரிவிப்பதற்கோ எந்தவிதமான தகுதியும் இல்லை என்றார்.

நீதித்துறை மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் முற்றிலும் இந்தியாவின் பொறுப்பு என்று மீண்டும் வலியுறுத்தியதுடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்தவொரு நிலைப்பாட்டையும் இந்தியா கடுமையாக நிராகரிக்கிறது.

பிரிவினைவாத தலைவர் ஆசியா ஆண்ட்ராபிக்கு தண்டனை அளிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரந்தீர் ஜெயிஸ்வால், பயங்கரவாதத்துக்கு நீண்ட நாள்களாக நிதியுதவி மற்றும் ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தான் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து பேசுகிறது.

பயங்கரவாதம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக பாகிஸ்தானுக்கு கடுமைாக எச்சரித்தார்.

பாகிஸ்தானிடம் இருந்து வரும் இதுபோன்ற அறிக்கைகள் தேவையற்றவை என்றும், அவை இந்தியாவின் உள்நாட்டு முடிவெடுக்கும் அல்லது சட்ட செயல்முறைகளைப் பாதிக்காது என்றும், இந்தியா தனது இறையாண்மை மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் மிக உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.

Summary

India strongly rejected Pakistan's recent remarks on matters related to its internal affairs...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.