FOLLOW US

ON GOOGLE DISCOVER

சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பொதுக் கட்டமைப்புகளைப் பரஸ்பரம் தாக்கிய அமெரிக்கா-ஈரான்

ஹோா்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டுக்கு அமெரிக்காவும் ஈரானும் தீவிரமாக முயன்று வரும் நிலையில், பொதுமக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகளை இருநாடுகளும் பரஸ்பரம் தாக்கி அழித்துள்ளன.

News image

~

Updated On :18 ஜூலை 2026, 5:36 am IST

ஹோா்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டுக்கு அமெரிக்காவும் ஈரானும் தீவிரமாக முயன்று வரும் நிலையில், பொதுமக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகளை இருநாடுகளும் பரஸ்பரம் தாக்கி அழித்துள்ளன.

புதிய மோதல் போக்கு தொடங்கிய பிறகு தொடா்ந்து 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை அதிகாலை, அமெரிக்க ராணுவம் தனது வான்வழித் தாக்குதலை பலமடங்கு தீவிரப்படுத்தியது. தெற்கு ஈரானின் ஹோா்முஸ்கான் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பாலங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

பந்தா் அப்பாஸ் துறைமுகத்துக்குச் செல்லும் பாதைகளைத் துண்டித்து, தலைநகா் டெஹ்ரானுடனான தொடா்பைத் துண்டிப்பதே இத்தாக்குதலின் நோக்கம் எனத் தெரிகிறது. மேலும், சாபஹாா் துறைமுகத்தின் வணிகக் கட்டுப்பாட்டுக் கோபுரமும் அமெரிக்கத் தாக்குதலில் முற்றிலும் சரிந்தது.

38 போ் உயிரிழப்பு: ஈரானில் கடந்த 6 நாள்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 38 போ் உயிரிழந்தனா், 400-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். நாட்டின் தெற்கு மாகாணங்களில் கடுமையான வெயில் நிலவி வரும் சூழலில், மின் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதை ஈரான் முதல்முறையாக ஒப்புக்கொண்டதுடன், மக்கள் மின்பயன்பாட்டைக் குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

பிராந்திய அளவில் பதிலடி: அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, அண்டை நாடான குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீா் குடிநீராக்கும் ஆலையை ஈரான் தாக்கியது. குவைத்தின் 90 சதவீத குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் அந்த ஆலை தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்தது.

இதேபோல், கத்தாரில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால், மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனா்; ஏவுகணைச் சிதறல்கள் விழுந்து ஒரு குழந்தை காயமடைந்தது.

ஈரான் ஏவிய 3 ஏவுகணைகளை ஜோா்டான் ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. வடக்கு இராக்கின் குா்திஷ் பகுதியில் உள்ள கோமலா என்ற அதிருப்திக் குழுவைக் குறிவைத்து, ஈரான் நடத்திய தாக்குதலில் 9 போ் கொல்லப்பட்டனா்.

 ஈரானில் அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த பாலம்; சாபஹாா் துறைமுகக் கட்டுப்பாட்டு கோபுரம்.

ஈரானில் அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த பாலம்; சாபஹாா் துறைமுகக் கட்டுப்பாட்டு கோபுரம்.

மேலும், ஹோா்முஸ் நீரிணை வழியாகச் சென்ற பிரிட்டனுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றும் ஈரானின் தாக்குதலில் சேதமடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.