சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

லெபனான் தாக்குதல்: அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது!

லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

News image

அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ​​பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (நடுவில்), அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (இடதுபுறம்) மற்றும் கத்தாரின் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி (வலது)

Updated On :21 ஜூன் 2026, 8:30 pm IST

லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

உலகம் முழுவதும் பொருளாதார பிரச்னைகளை ஏற்படுத்திய அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. ஈரானின் அணு ஆயுதக் கொள்கையில் தளர்வு, ஹோர்முஸ் நீரிணை திறப்பு என பல்வேறு கோரிக்கைகள் அமெரிக்காவால் வைக்கப்பட்டது.

ஈரான் சிலவற்றை ஏற்றுக்கொள்ளாத நிலையில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் தள்ளிப்போனது. இந்த நிலையில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை முடிவுபெற்று பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும், லெபனானில் போர் முழுமையாக நிறுத்தப்படாமல், அடுத்தகட்ட இறுதி அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்குள் தங்களால் நுழைய முடியாது என்றும் ஈரான் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் ஈரான் அரசு ஹோர்முஸ் அணையை மூடுவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரான் அதிகாரிகள் இடையே இன்று மீண்டும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் நடைபெறுகிறது. கத்தார் பிரதமரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

”லெபனானில் போர் முடிவுக்கு வராவிட்டால், இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது சாத்தியமில்லை” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Amidst Israel's ongoing attacks in Lebanon, talks between the United States and Iran are taking place again today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.