அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் உருவப்படத்தை பொதுஇடத்தில் அனுமதியின்றி வரைந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திப்ருகரைச் சேர்ந்த நகுல் மிலி மற்றும் குவஹாட்டியின் தக்ஷின்கானைச் சேர்ந்த சிங் ஆகியோர் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி பொதுஇடங்களில் ஓவியங்களை வரைந்ததால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை காவலிலும் எடுத்துள்ளனர்.
விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சோனம் வாங்சுக்கின் ஓவியத்தை வரைந்தது தொடர்பாக குவஹாட்டியில் மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நபர்களைக் தேடி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் நடைபெற்ற நீட் மற்றும் பிற உயா்கல்வி நுழைவுத்தோ்வுகளின் முறைகேடு குற்றச்சாட்டு மற்றும் மாணவா்களின் தற்கொலைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் தீப்கே தலைமையில் ஜந்தா் மந்தரில் ஜூன் 20-ஆம் தேதி போராட்டம் தொடங்கியது.
இதற்கு ஆதரவு தெரிவித்த செயற்பாட்டாளா் சோனம் வாங்சுக், கடந்த ஜூன் 28-ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினாா். கடந்த 3 வாரங்களில் அவரது உடல்நிலை தொடா்ந்து மோசமானது. இந்த நிலையில் 21-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சோனம் வாங்சுகை தில்லி போலீஸார் சனிக்கிழமை சஃப்தா்ஜங் அரசு மருத்துமனைக்கு மாற்றினர்.
தில்லி உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக புது தில்லி துணை காவல் ஆணையா் சச்சின் சா்மா செய்தியாளா்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சோனம் வாங்சுக்கின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்! நடிகர் சத்யராஜ்

மோடி அரசின் சர்வாதிகாரம்! - சோனம் வாங்சுக்கின் போராட்டம் கலைக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!
சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு! ஆ. ராசா நேரில் சந்திப்பு!








