கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இளைஞர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிடுவதற்குப் பதிலாக அவர்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில் ஜந்தர் மந்தரில் இருந்து அமைதிப் பேரணி நடத்த சிஜேபி ஆதரவாளர்கள் முயன்றனர். இதனிடையே, பொதுப் பாதுகாப்புக் கருதி தில்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், சிஜேபி போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்கள் மீது இன்று காலை தடியடி நடத்தப்பட்டது. சிலரை காவல்துறையினரும், மத்திய ஆயுதப் படையினரும் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கேஜரிவாலின் எக்ஸ் பதிவில்,
மத்திய அரசு தனது ஆணவத்தைக் கைவிட்டு, இளைஞர்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களும் ஜந்தர் மந்தரில் லட்சக்கணக்கில் கூடியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளைக் கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் மீது தடியடி நடத்த மத்திய அரசு உத்தரவிடுகிறது.
அந்தப் பகுதியில் இணையச் சேவையைத் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்வதைத் தடுத்து நிறுத்துகிறீர்கள். இது சரியல்ல.
நீதி கேட்டு வீதிக்கு வந்துள்ள இவர்கள் நம் நாட்டின் பிள்ளைகள். இத்தகைய சூழலில் அவர்கள் மீது தடியடி நடத்துகிறீர்கள். ஆணவத்தைக் கைவிட்டு அவர்களின் குரலுக்குச் செவிசாயுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் காணொலி செய்தி மூலம், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக, தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதில் பங்கேற்றனர்.
AAP national convenor Arvind Kejriwal on Monday appealed to the Centre to "listen to the youth" instead of ordering a lathi charge against protesters as thousands tried to march to Parliament as part of the Cockroach Janta Party's (CJP) protest demanding Union Education Minister Dharmendra Pradhan's resignation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜந்தா் மந்தா் போராட்டத்தில் பங்கேற்க பெற்றோா், மாணவர்களுக்கு கேஜரிவால் அழைப்பு
பாதுகாப்பவர்களே வன்முறையாளர்கள்... சிஜேபி போராட்டத்துக்கு பார்வதி ஆதரவு!

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வாங்சுக்குக்கு கேஜரிவால் வேண்டுகோள்








