ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய தர்மேந்திர பிரதான் மீது தடியடி! எப்போது?

1997ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய தர்மேந்திர பிரதான் மீது தடியடி! எப்போது?

News image

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் - DIN

Updated On :23 ஜூலை 2026, 3:53 pm IST

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த 1997ஆம் ஆண்டு மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த போது, ஒடிசா தலைமைச் செயலக வாயிலில், வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய செய்திகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

காங்கிரஸ் தலைமையில் ஒடிசாவில் ஜானகி பட்நாயக் தலைமையிலான அரசு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வினாத்தாள் கசிவுக்கு எதிராக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தியிருக்கிறார். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதில், தர்மேந்திர பிரதானும் தாக்கப்பட்டதாக, அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு, தற்போது புவனேஸ்வரத்தில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியராக இருக்கும் ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்த போராட்டம், புவனேஸ்வரத்தில், முதல்வர் இல்லத்துக்கு மிக அருகே நடந்துள்ளது. அந்தப் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் என 1500 பேர் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ஒரு இளைஞர்தான் இன்று மத்திய கல்வி அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான்.

தர்மேந்திர பிதான் தன்னுடைய 18 வயதில் மாணவர் அரசியல் அமைப்பில் இணைந்தார், பிறகு படிப்படியாக பல பதவிகளை வகித்து இன்று மத்திய அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். உத்கல் பல்கலையில் மானுடவியல் (ஆந்த்ரோபாலஜி) பட்டம் பெற்றவர், ஏபிவிபி அமைப்பின் தேசிய செயலராக 1994 மற்றும் 1997 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.

Summary

Dharmendra Pradhan fought against paper leak When?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.