தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

இளைஞர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்

மாணவர்களிடம் வெறும் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தாண்டி நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன என பிரதான் கூறியிருப்பது...

News image

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் - ANI

Updated On :22 ஜூலை 2026, 9:26 am IST

நீட் தேர்வு, வினாத் தாள் கசிவு உள்பட அனைத்து விவகாரங்களிலும் இளைஞர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் (சிஜேபி) தில்லியில் திங்கள்கிழமை ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான இளைஞா்கள், நாடாளுமன்றம் நோக்கி நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதனால் பாதுகாப்புப் படையினா் மற்றும் போராட்டக்காரா்கள் இடையே வெடித்த மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈா்த்தது.

இந்த நிலையில், நீட் தேர்வு, வினாத் தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தில்லியில் அறவழியில் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி, தொண்டர்களுடன் பிரதமர் இல்லத்துக்கு வெளியே தொண்டர்களுடன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.

இவா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து, பிரதமா் இல்லம் அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இளைஞர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியினர், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது குழப்பத்தை உருவாக்க மாணவர்களை அரசியல் கருவிகளாக தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே தர்னா போராட்டம் நடத்தத் தேர்ந்தெடுத்தனர்; இதன் மூலம் பொதுமக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியதோடு, நிறுவப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளையும் அவர்கள் புறக்கணித்தனர்.

விரிவான விவாதத்திற்குத் தயாராக இருப்பதாக அரசு தெரிவித்த பின்னரும் கூட, காங்கிரஸ் ஜனநாயக ரீதியிலான விவாதத்தை விடுத்து அரசியல் நாடகத்தையே தேர்ந்தெடுத்தது. ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, இது மாணவர்களுக்கான தீர்வுகளைக் காண்பது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை; மாறாக, அரசியல் ரீதியான தலைப்புச் செய்திகளைப் பெறுவதற்காகக் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாக உள்ளது.

நீட் தேர்வு, வினாத் தாள் கசிவு உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், நமது மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஒவ்வொன்றிற்கும் தீர்வு காணவும் மத்திய அரசு 100% உறுதியுடன் உள்ளது. அரசியல் பிரசாரத்தில் வெறும் கருவிகளாக நடத்தப்படுவதை விடச் சிறந்ததையே நமது மாணவர்கள் பெறத் தகுதியானவர்கள். குழப்பத்திற்குப் பதிலாகத் தெளிவான நிலைப்பாட்டையும், வெறும் முழக்கங்களுக்குப் பதிலாகத் தீர்வுகளையும், இடையூறுகளுக்குப் பதிலாகப் பொறுப்புணர்வையும் அவர்கள் பெறத் தகுதியானவர்கள்.

மாணவர்களிடம் வெறும் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தாண்டி நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. அவர்களுக்கு தெளிவான தீர்வுகள், பதில்கள், சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நாம் வழங்க வேண்டும். அதைத்தான் அரசு வழங்குவதில் உறுதியாக உள்ளது என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

Summary

We owe our students more than outrage. We owe them answers, reforms and accountability.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.