இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!

இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்தும் மாருதி நிறுவனத்தைப் பற்றி...

News image

மாருதி ஸ்விஃப்ட்.

Updated On :22 ஜூலை 2026, 9:12 am IST

நடப்பாண்டில் கடந்த இரண்டு மாதங்களில் மாருதி நிறுவனம் 2-வது முறையாக கார்களின் விலையை உயர்த்தியுள்ளதால், கார் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா, வீட்டு உபயோக கார்கள் மட்டுமின்றி, டிராவல்ஸுக்குப் பயன்படுத்தும் வகையிலான ஸ்விஃப்ட் ரக கார்கள் விற்பனையில் தனி இடத்தைத் தக்கவைத்திருக்கிறது. வெளிநாட்டுக்கு கார்கள் மீதான மோகம் இருந்தாலும், மாருதி சுசூகி கார்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கின்றன.

இந்தியாவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர் சரிவு, பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் மூலப்பொருள்களின் விலை உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி, கார் நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், மாருதி சுசூகி நிறுவனமும் கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால், அனைத்து விதமாக கார்களிலும் விலை உயர்வு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் வகையில், அனைத்து கார்களின் விலையிலும் ரூ. 30,000 வரை விலை உயர்வு இருக்கும் என்று மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் கடந்த ஜூன் மாதமும் இதேபோன்று ஒவ்வொரு காருக்கும் ரூ. 30,000 வரையிலான விலை உயர்வை அமல்படுத்தியிருந்தது.

கடந்த சில மாதங்களாக, செலவீனங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வந்தாலும், விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை 10 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனமும் தனது எஸ்யூவி கார்களுக்கு சராசரியாக 2.7 சதவிகிதம் வரை விலையை உயர்த்தியிருந்தது. மூலப்பொருட்களின் விலை உயர்வே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்றும் மஹிந்திரா நிறுவனம் கூறியிருந்தது.

மஹிந்திரா மட்டுமின்றி, உயர் ரக கார் தயாரிப்பாளர்களான பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற சொகுசு கார் தயாரிப்பாளர்களும் தங்கள் கார்களின் விலையை உயர்த்தியுள்ளனர். கியா நிறுவனமும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 2 சதவிகிதம் விலையை உயர்த்தியது.

என்னதான், காரின் விலை உயர்வு இருந்தாலும் இதன் தாக்கம் கார் விற்பனையில் குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2027 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், கார் விற்பனை 25.9 சதவிகிதம் அதிகரித்து, 12,73,811 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா - ஈரான் இடையேயான மேற்காசியப் போர் தொடங்கிய மார்ச் மாதத்தின் துவக்கத்தில் இருந்து இரும்பு மற்றும் பிளாஸ்டிக் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த ஓராண்டில் இவற்றின் விலைகள் 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்தே கார்களில் விலை உயர்வுக்கு காரணமென்று கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.

Summary

Citing persistent inflationary pressures and rising commodity costs, carmakers have continued to raise vehicle prices. For the second time in three months, Maruti Suzuki India (MSIL), the country's largest carmaker, will increase prices across its models.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.