சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ரூ. 10 லட்சத்துக்குள் சிறந்த சிஎன்ஜி கார்கள்!

ரூ. 10 லட்சத்துக்குள் சிஎன்ஜி கார்கள் வாங்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு..

Best CNG cars

சிஎன்ஜி கார்

Published On :4 ஜூலை 2026, 5:41 pm IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் குறைந்த செலவில் காரை இயக்க விரும்புபவர்களின் முதல் தேர்வாக தற்போது சிஎன்ஜி கார்கள் மாறி வருகின்றன. குறைந்த இயக்கச் செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் என்பதால், இந்த வகை கார்கள் மீது மக்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

ரூ. 10 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய சிறந்த சிஎன்ஜி கார்கள்..

டாடா பன்ச் ஐ சிஎன்ஜி - இந்த கார் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜினுடன் வரு இந்த மைக்ரோ எஸ்யுவி, தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி அமைப்பைப் பெறுகிறது. இதனால் டிக்கி இடம் குறைவதில்லை. 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு, உறுதியான அமைப்பு இதன் முக்கிய பலம். இதன் விலை ரூ. 7.10 லட்சம் முதல் 9.55 வரை உள்ளது.

மாருதி சுசூகி பலேனோ சிஎன்ஜி - 1.2 லிட்டர் கே-சீரிஸ் டூயல்ஜெட் என்ஜினுடன் கிடைக்கும் பலேனோ சிஎன்ஜி விசாலமான கேபின் கொண்டுள்ளது. பிரீமியம் வசதிகளால் கவனம் ஈர்க்கிறது. 6 ஏர்பேகுகள், தானியங்கி குளிர்சாதன வசதி, தொடுதிரை, பொழுதுபோக்கு அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை ரூ. 8.35 முதல் 9.35 லட்சம்

மாருதி சுசூகி வேகன் ஆர் சிஎன்ஜி - 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கும் இந்த கார் நகரப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. உயரமான கேபின், விசாலமான உட்புறம், குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் விலை ரூ. 6.45 லட்சம் முதல் ரூ. 6.95 லட்சம்

ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி - 1.2 லிட்டர் இரட்டை எரிபொருள் என்ஜினுடன் கிடைக்கும் இத் செடான், குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற மாடலாகும். 6 ஏர்பேக்குகள், பின்புற ஏசி வென்ட்கள், 8 அங்குல தொடுதிரை உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. தனி டிக்கி வசதி இருப்பதால் நீண்ட பயணங்களுக்கும் ஏற்றது. இதன் விலை ரூ. 7.60 லட்சம் முதல் ரூ. 8.80 லட்சம்

ஹூண்டாய் எக்ஸ்டர் ஐ சிஎன்ஜி - 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் கொண்ட இந்த மாடல், எஸ்யுவி போன்ற தோற்றத்துடன் வருகிறது. மின்சார சன்ரூப், இரட்டை கேமரா டாஷ்கேம், வயர்லெஸ் செல்போல் சார்ஜிங் உள்ளிட்ட பல நவீன வசதிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் விலை ரூ. 5.81 லட்சம் முதல் ரூ. 9.61 லட்சம்

For those looking to buy CNG cars under ₹10 lakh...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.