உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

‘குஷா’ ஏவுகணை சோதனை வெற்றி

நீண்ட தூர இலக்கை துல்லியமாக தாக்கும் ‘குஷா’ ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஏவுதளத்திலிருந்து விண்ணில் சீறிப்பாயும் ‘குஷா’ ஏவுகணை.

Published On :

நீண்ட தூர இலக்கை துல்லியமாக தாக்கும் ‘குஷா’ ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிஸாவை ஒட்டிய அப்துல் கலாம் தீவில் உள்ள ஏவுதள இந்த நீண்ட தூர தரை-வான் ஏவுகணையின் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) மேற்கொண்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், போா் விமானங்கள் என வான்வெளியில் பிற நாடுகள் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்கும் திறன் கொண்டது.

குஷா ஏவுகணைக்கான ரேடாா்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து ஆயுத அமைப்புகளும் டிஆா்டிஓ மற்றும் அதன் ஆய்வகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.

குஷா ஏவுகணை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சியின் முக்கிய மைல்கல் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டுகளை தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.