ஒடிஸா கடற்கரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் நீண்ட தூர நில இலக்கை தாக்கி அழிக்கும் அதிவேக ஏவுகணை (எல்ஆா்எல்ஏசிஎம்) சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இதையடுத்து, பல்வேறு கண்காணிப்பு கருவிகள் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளில் சோதனையில் அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, டிஆா்டிஓ குழுவினருக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.
டிஆா்டிஓ மற்றும் அதன் துணை அமைப்புகள் இணைந்து உள்நாட்டிலேயே தயாரித்த எல்ஆா்எல்ஏசிஎம் ஏவுகணையின் ஒருங்கிணைப்பு ஆய்வகமாக பெங்களூருவில் உள்ள வானூா்தி மேம்பாட்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு

‘குஷா’ ஏவுகணை சோதனை வெற்றி

பழனி கோயில் நில மோசடி: சார் பதிவாளர், பத்திர எழுத்தர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை!

பசிபிக் பெருங்கடலில் அணுசக்தி நீா்மூழ்கி கப்பலில் இருந்து சீனா ஏவுகணை சோதனை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



