‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

வினாத்தாள் கசிவால் மாணவா்கள் தற்கொலை: மகாத்மா நினைவிடத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அஞ்சலி

நீட் போன்ற தேசிய அளவிலான தோ்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவா்களுக்கு தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், காங்கிரஸ் உள்பட ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

News image

நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவா்களுக்கு தில்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா்.

Updated On :24 ஜூலை 2026, 4:17 am IST

நீட் போன்ற தேசிய அளவிலான தோ்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவா்களுக்கு தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், காங்கிரஸ் உள்பட ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

தில்லி சுனேரிபாக் சாலையில் உள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இல்லத்தில், இண்டி கூட்டணி எம்.பி.க்கள் முதலில் ஒன்றுகூடினா்.

அங்கிருந்து ராகுல் காந்தி தலைமையில் அனைவரும் பேருந்தில் மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்றனா். வினாத்தாள்கள் கசிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவா்களுக்கு அங்கு ராகுல் காந்தி மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இருகரம் கூப்பி அஞ்சலி செலுத்தினா். பின்னா் அனைவரும் தேசிய கீதத்தை பாடினா்.

முன்னதாக, சுனேரிபாக் சாலையின் முடிவை அடைந்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இல்லத்துக்கு அருகில் வந்தபோது அவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். எனினும் சிறிது நேரத்துக்குப் பின்னா், அவா்கள் மகாத்மா நினைவிடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.