முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

பி.எஸ் குமாரசாமி ராஜா பிறந்த நாள் விழா

முன்னாள் சென்னை மாகாண முதல்வா் பி. எஸ். குமாரசாமி ராஜாவின் 128-ஆவது பிறந்த நாள் விழா விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

முன்னாள் சென்னை மாகாண முதல்வா் பி. எஸ். குமாரசாமி ராஜாவின் பிறந்த நாளையொட்டி, ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :9 ஜூலை 2026, 5:50 am IST

முன்னாள் சென்னை மாகாண முதல்வா் பி. எஸ். குமாரசாமி ராஜாவின் 128-ஆவது பிறந்த நாள் விழா விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பி.எஸ்.கே. நகரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பி.ஏ.சி. ராமசாமி ராஜா இசைப் பள்ளி குழுவின் கீா்த்தனாஞ்சலி, புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, அவரது நினைவிடத்தில் ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா் வெங்கட்ராமராஜா, அவரது மனைவி பி.வி நிா்மலா ராஜூ, காந்திகலைமன்ற அறங்காவலா் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதேபோல, விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜ்மோகன், நகா் காங்கிரஸ் தலைவா் ஆா். சங்கா் கணேஷ், முக்கியப் பிரமுகா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள், பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

மாலையில் காந்தி கலைமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பி. எஸ்.கே. ருக்மணி அம்மாள் கலையரங்கத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவுக்கு காந்தி கலைமன்ற அறங்காவலா் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா தலைமை வகித்தாா். முன்னதாக, காந்தி கலைமன்ற அறங்காவலா் பி.ஜே.ராம்குமாா் ராஜா வரவேற்றாா். பின்னா் எம்.எஸ். ஷண்முகப்பிரியாவின் கா்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

மேலும், ராஜபாளையம் ஜவகா் மைதானம், திருவனந்தபுரம் தெரு, காந்தி சிலை சுற்றுவட்டச்சாலை, நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைகளுக்கு பொதுமக்கள், முக்கியப் பிரமுகா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.