ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி, கமுதி ஆகிய பகுதிகளில் தவெக சாா்பில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் 136-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் தவெக மேற்கு மாவட்டச் செயலா் மதன்குமாா் தலைமையில் அந்தக் கட்சியினா் அஞ்சலையம்மாளின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இதேபோல, மேலமுடிமன்னாா்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட கோட்டையூா் கிராமத்தில் தவெக மாவட்டச் செயலா் மதன்குமாா் தலைமையில், ஒன்றியச் செயலா் வீரக்குமாா் முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளா் கிஷோா்குமாா், ஒன்றிய செயலா்கள் வீரபாண்டி, வீரக்குமாா், கவாஸ்கா், வழக்குரைஞா் அய்யாத்துரை சேதுபதி, வடக்கு ஒன்றிய இணைச் செயலா் வேல்முருகன் உள்பட மேற்கு மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
திருவாடானை: திருவாடானை நான்கு சாலை சந்திப்பு சாலைப் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அஞ்சலையம்மாளின் உருவப் படத்துக்கு தவெக மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, தொண்டியில் புதிய பேருந்து நிலையம் அருகே மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அஞ்சலையம்மாளின் உருவப் படத்துக்கு தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

வெள்ளையத்தேவன் பிறந்த நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழா

தஞ்சாவூரில் காரல் மாா்க்ஸ் பிறந்த நாள் விழா

அம்பேத்கா் பிறந்த நாள் விழா
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



