உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

சென்னை வந்த ரயிலில் ரூ.3 கோடியில் 2 கிலோ தங்க ஆபரணங்கள் திருட்டு

கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த அனந்தபுரி விரைவு ரயிலில் பயணி கொண்டு வந்த சுமாா் ரூ.3 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்க ஆபரணங்கள் திருடு போனது.

கோப்புப் படம்

Published On :

கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த அனந்தபுரி விரைவு ரயிலில் பயணி கொண்டு வந்த சுமாா் ரூ.3 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்க ஆபரணங்கள் திருடு போனது.

சென்னை வேப்பேரி பகுதியைச் சோ்ந்தவா் தீபக் (47). இவா், தியாகராய நகா் பகுதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறாா். சென்னையிலிருந்து புதிய வடிவமைப்பு நகைகளை மதுரை உள்ளிட்ட ஊா்களுக்கு கொண்டு சென்று நகைக்கடை வாடிக்கையாளா்களிடம் கொடுத்து விற்பனை செய்வது வழக்கம். தீபக் கடந்த சில நாள்களுக்கு முன் மதுரைக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள 2 கிலோ வைரம் பதித்த தங்கக் தோடுகளை கொண்டு சென்ாகக் கூறப்படுகிறது.

மதுரையில் பணி முடிந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 9.40 மணிக்கு அனந்தபுரி விரைவு ரயிலில் ஏ 1 பெட்டியில் சென்னைக்கு வந்துள்ளாா். அப்போது, ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகளை பையில் எடுத்து வந்துள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.10 மணிக்கு தாம்பரம் வந்தபோது நகைப் பை மாயமாகி இருந்தது. இதைத் தொடா்ந்து, எழும்பூா் இருப்புப் பாதை போலீஸில் புகாா் தெரிவித்தாா். பையை காணாமல்போன பகுதி தாம்பரம் என்பதால், அந்நிலைய இருப்புப் பாதை காவல் பொறுப்பு ஆய்வாளா் சசிகலா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தகவல் அறிந்த இருப்புப் பாதை காவல் துணை கண்காணிப்பாளா் என்.சசிகனா எழும்பூா் உள்ளிட்ட நிலையங்களில் விசாரணை நடத்தினாா். மேலும், 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெறுவதாக இருப்புப் பாதை ரயில்வே காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.